என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » நிலக்கல் அடிவார முகாம்
நீங்கள் தேடியது "நிலக்கல் அடிவார முகாம்"
சபரிமலையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் இன்று காலை ஐயப்பனை தரிசிக்க வந்த இரண்டு பெண்கள் போலீசாரால் திருப்பி அனுப்பப்பட்டனர். #SabarimalaProtest #SabarimalaWomen
கேரளா:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கேரள அரசும் முழு அளவில் உத்தரவிற்கு இணங்கியது. இருப்பினும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு சபரிமலை கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது என்று கூறி ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கோவில் நடை திறந்த நாள் முதல் அங்கு சென்ற இளம்பெண்கள் பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.
ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ள கேரள அரசு, சபரிமலை செல்ல விரும்பும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க தொடங்கியது. இதன் மூலம், பல பெண்கள் சபரிமலை சென்று பாதுகாப்புடன் ஐயப்பனை தரிசித்து வருகின்றனர்.
இந்நிலையில் , இன்று காலை மேலும் இரு பெண்கள் சபரிமலை செல்வதற்காக நிலக்கல் அடிவார முகாமை வந்தடைந்தனர். அங்கிருந்து அவர்கள் கோவில் நோக்கி புறப்பட முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பம்பையில் ஐயப்ப பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் திரும்பி செல்லுமாறு கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து இரண்டு பெண்களும் திரும்பிச் சென்றனர். #SabarimalaProtest #SabarimalaWomen
×

X